Eniyavanin kural

ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்

1 min · 24 de jun de 2021
Portada del episodio ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்

Descripción

நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளில் சில காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவும் நல்ல உதாரணம். ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது. பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர். அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர். இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர். ஆனால் தற்போது இந்தப் பழமொழி மருவி, “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” எனக் கூறப்படுவதால், பலர் மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் தம்பதிகளின் வாழ்க்கைதான் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டால் நல்லது.

Comentarios

0

Sé la primera persona en comentar

¡Regístrate ahora y únete a la comunidad de Eniyavanin kural!

Prueba gratis

Empieza 7 días de prueba

$99 / mes después de la prueba. · Cancela cuando quieras.

  • Podcasts solo en Podimo
  • 20 horas de audiolibros al mes
  • Podcast gratuitos

Todos los episodios

20 episodios

episode Namakku Soru dhaan mukkiyam artwork

Namakku Soru dhaan mukkiyam

நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கவும் உண்ணவும் கூடிய பல உணவு பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டதாய் உள்ளன.இதை பற்றிய ஓர் சிறிய விழிப்புணர்வாய் இது இனியவனின் குரலாய்...#foodandsafety #fssai #foodvlogs #adulteration #drugs #chemicals #eniyavaninkural #kseniyavanpodcasting #trending #tamilpodcasts #tamilshows #stories #motivation #lovepodcast #world #india #essential #love #beast #ukraineandrussia #comedy #fun #travel #education #entertainment #business #trending #viralpost #voice #tamil #listening #google #spotify #wynkmusic #anchor #fm #rj #iphone

17 de abr de 202225 min
episode ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ! artwork

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே !

இப்பழமொழியில் இரண்டு விஷயங்கள் நளினமாய் மறைக்கப்பட்டுள்ளன. நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே என்று வந்திருக்க வேண்டும். அவசர உலகில் பேசுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த பழமொழியில் நல்லவை, தீயவை என்ற இரண்டு வார்த்தைகளும் மறக்கப்பட்டு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று வந்துவிட்டது.

25 de jun de 20211 min
episode ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் artwork

ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்

நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளில் சில காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவும் நல்ல உதாரணம். ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது. பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர். அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர். இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர். ஆனால் தற்போது இந்தப் பழமொழி மருவி, “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” எனக் கூறப்படுவதால், பலர் மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் தம்பதிகளின் வாழ்க்கைதான் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டால் நல்லது.

24 de jun de 20211 min