Kadhaiya Kavithaiya
Podcast von Kadhaiya Kavithaiya
சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்ம...
Kostenlos testen für 30 Tage
Nach der Testphase nur 4,99 € / Monat.Jederzeit kündbar.
Alle Folgen
59 Folgenநீ என் நிலவோ? அடியே என் ரதியே! இதமான குளிர் காற்று திடீரென்று! வெக்கை தணிக்க யார் அனுப்பியது இங்கு? சுருங்கிய கண்களை மெல்ல பிரிக்க இருளின் நடுவினில் வென்மையாய் நீ! சற்று பொறு! தனிமை விட்டு வருகிறேன் கொஞ்சம் என்னை ஏற்றுக்கொள்! சற்று பொறு! உன் விரல்கள் பிடிக்க வருகிறேன் கொஞ்சும் என்னை கொஞ்சிக்கொள்! விழி பார்த்து நான் திளைக்க வீதியெல்லாம் நீ நகர கட்டுண்ட கயிறு போல நீ என்னை சுண்டி இழுக்க நீரிலிட்ட படகாய் நானும் பின்னே வருகிறேன்! சற்று பொறுத்தது எல்லாம் போதுமே! பகல் எதும் இன்றியே நீயும் நானும் இனி அன்றில் போல இணைந்தே இரவின் வாசம் தேடி திரியலாம்! என்ன சொல்கிறாய் என் நிலவே! ©Samcb
©Samcb
சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட அந்த traffic -ல் முன்னின்ற அவளை முதன்முதலாக பார்க்கிறேன் தேரில் வலம் வரும் ராணி போல 115 (நூத்தி பதினஞ்சு) cc ஸ்கூட்டரில் அவள் நின்றாள் அத்தனை வேட்கையிலும் பனி மூடி வரும் குளிரினை உணர்ந்தேன் அவள் துப்பட்டா என் மீது பட்ட நொடியில் சூரியனின் வேட்கையை அவள் உணர்ந்தாளோ இல்லை எந்தன் கண் பார்வை அவள் அறிந்தாலோ ஒளித்து வைத்த அவள் முகத்தை துப்பட்டா இருந்து வெளி கொண்டு வந்தாள் இப்பொழுது எனக்கு ஜன்னியே வந்து விட்டது அவள் அழகில் விழுந்து சிவப்பிலையே நின்று விடாதா இந்த signal என்று என் உள் மனம் தடுமாறியது காற்றில் அவள் கூந்தல் திமிற நானும் திமிறினேன் சட்டென்று எத்தனையோ முறை இப்படி பலரை பார்த்தும் ஒரு முறை கூட இப்படி நான் இருந்ததில்லை இது என்னவென்று சொல்ல நானும் முதல் காதலோ? இல்லை முடிவில்லா துவக்கமா? பச்சை signal அங்கு போடும் முன்னமே அவள் என் இதயத்தை பறித்துக்கொண்டாள் நான் மட்டும் எப்படி செல்வேன் தனியாக குளிரினில் உறைந்த நான் மீண்டும் வேட்கையில் வெந்தே போவேன் எல்லாம் இத்தனை என்னுளே நடந்து போக அடிச்சான் பாரு ஒருத்தன் ஹார்ன் cha... சிக்னல் போடவும் அவ பறந்து போறா... நா பாவமா அவ பின்னாடி போனேன் அடுத்த signal சீக்கரம் வராதா என்று...
ஒற்றை திரையில் வாழ்வின் அடித்தளம்! சாதாரண கண்கள் காணும் அழகிய பக்கங்களின் வர்ணங்களை அயராத இவர்கள் கண்கள் செதுக்கும் கடினமாய் உழைத்திடும் நேரத்தை எல்லாம் குறைத்திட நிரலாக்கம் செய்து ஒழுங்கு படுத்தும் சந்தோசமாய் கழித்திடும் பொழுதுபோக்கு தளங்களுக்கும் பின்னணியாய் இவர்கள் விரல்கள் இருக்கும் மொழிகள் பல உலா வந்தாலும் இவர்கள் மொழி தனி தான் தட்டச்சு தட்டியே திரை மொத்தம் ஜொலித்து இருக்கும் கண் பார்வை தாண்டியே தர்க்கங்கள் நிறைந்து ஒளிந்திருக்கும் விடியும் பொழுதிலும் மூழ்கும் இரவிலும் கணினி சூரியன் முன்னிருக்கும் உடற்பயிற்சி செய்திடாத உடல் இருந்தும் விரல்கள் வலுவாய் இருக்கும் முகங்கள் யாருக்கும் தெரிந்திடாமல் போனாலும் இவர்களின் முயற்சிகள் எங்கும் நிறைந்திருக்கும் தொழில்நுட்பம் வளரும் ஒவ்வொரு அசைவிற்கும் இந்த கலைஞர்களின் கைவண்ணம் ஆழம் இருக்கும் ஆம், கண்முன்னே தோன்றிடினும் இவர்கள் மறைக்கப்பட்டவர்களே திரைக்கு பின்னே...
கற்பனையில் பறந்த நாட்களை தான் ஒத்தி வைப்போம் கனவினில் வின் சென்ற நிமிடங்களையும் தூரம் வைப்போம் மனதில் ஆயிரம் வலிகள் இருப்பினும் மறைத்து வைப்போம் இங்கு யாரோடு யார் சோகமும் பகிர்தல் என்பதே பொய் தான் சில நேரம் கேளிக்கைகளுக்காக, சில நேரம் நம் கண்ணீர் கரைக்க மட்டுமே... கேட்க காதுகள் இருப்பினும் நோக்கம் நேர்மை இருப்பினும் சுமப்பது ஒரு மனது மட்டுமே வழிகள் ஆயிரம் யாரும் சொல்லலாம் கண் சிவந்து நீர் வற்றி போன பின்பு மீண்டும் யோசித்து பாருங்கள் உங்களுக்கு தேவையான வழி தானாக வரும் ஒடிந்த சிறகுகள் மீண்டும் உயிர்பெறும் ஓய்வில்லாமல் மீண்டும் படபடக்க தயாராகும் கண்டம் தாண்டி செல்லும் பறவை போல இளைப்பாற இடம் இல்லாது இருந்த மனமும் நின்று உயிர் பெறும் எல்லாம் நிதானம் வந்துத்தான் ஆக வேண்டும் பட்டு போன மரம் இருந்து வரும் சிறு கிளை போல நம்பிக்கையும் வரும் மனதோரம் செய்த சண்டைகள் முற்று புள்ளிகள் பெறும் முகம் சற்று ஜொலிஜொலித்திடும் கண்கள் சிவக்க வற்றிய கண் நீரும் மெல்ல கண்களை கழுவ இயல்புக்கு திரும்பியிருக்கும் ரசித்திடாத ஓசையும் காற்றின் கீதமும் உதட்டோரம் புன்னகை பூக்க செய்திருக்கும் நடுங்கிய கைகளும் சிறகுகள் போல திடம் பெற்றிருக்கும் தடுமாறி நடந்த கால்களும் நிலையாக நின்றிருக்கும் சில நொடி சிந்தித்து பார்க்கையில் பலவற்றைத் தாண்டி வந்திருப்போம் எதுவும் மறந்து மக்கி போகாது எனினும் மெல்ல மெல்ல ஒரு ஓரம் ஒதுக்கி கடந்து வந்தே இருப்போம் ஆசை கொண்ட மனதிற்கு நிராசை தான் பரிசு அறிந்தும் அடுத்த ஆசை கொள்வோம் சிறகுகள் மீண்டும் ஒடிந்தால் தான் என்ன மீண்டும் பறக்கலாம் சிறகுகளே இல்லாமல்...
Nutze Podimo überall
Höre Podimo auf deinem Smartphone, Tablet, Computer oder im Auto!
Ein ganzes Universum für Unterhaltung für die Ohren
Tausende Hörbücher und exklusive Podcasts
Ohne Werbung
Verschwende keine Zeit mit Werbeunterbrechungen, wenn du bei Podimo hörst
Kostenlos testen für 30 Tage
Nach der Testphase nur 4,99 € / Monat.Jederzeit kündbar.
Exklusive Podcasts
Werbefrei
Nicht-Podimo-Podcasts
Hörbücher
20 Stunden / Monat